ப.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படத்தின் பாடல் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கபாலி பட இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஓப்பனிங் பாடல் காட்சியின் ஒரு பகுதி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 45 விநாடிக்கு கசிந்துள்ள இந்த பாடலில், ரஜினியின் பிண்ணனி குரலில் “ நான் கால வைக்கிறதும் வைக்காததும், உன் தலை இருக்குறதும், இருக்காததும் உன் கைலதான் இருக்கு” எனும் வசனத்துடன் அமைந்துள்ளது.
இந்த விவகாரத்தால் காலா படக்குழு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை தாராவியில் படமாக்கப்பட்ட இந்த காட்சியை, வேடிக்கை பார்த்த யாரேனும் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பிண்ணனி பாடல் ஒலிக்கும்போது, மக்களின் மத்தியில் ரஜினி ‘மாஸ்’ஆக நடந்துவருவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் இணையத்தில் கசிந்தது ஒரு சிறிய பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், இந்த பின்னணி பாடல் காட்சிகளே காலா படத்திற்கான எதிர்ப்பார்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
0 comments:
Post a Comment