சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் மூன்றாவது போட்டியில், தென்னாபிரிக்க அணியை எதிர்த்து இலங்கை அணி மோதியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி அதிரடியாக ஆடி 50 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் ஆறு இலக்கு நஷ்டத்திற்கு 299 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஹசீம் அம்லா 103 ஓட்டங்களையும் டூபிளசீஸ் 75 ஓட்டங்களையும் குவித்தனர். பந்து வீச்சில் பிரதீப் இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
300 என்ற சவாலான இலக்கை நோக்கி இலக்கை நோக்கி அதிரடியாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி முதலாவது இலக்குக்காக 69 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில், டிக்வெல்ல 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் தாஹூரின் சுழலில் அடுத்தடுத்து நடையைக் கட்டினர். மறுமுனையில் சிறப்பாக ஆடிய தரங்கவும் 57 ஓட்டங்களுடன் நடையைக் கட்ட ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் கைகளுக்குள் வந்தது. தனியாளாகப் போராடிய குஷால் பெரேரா 44 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 41.3 பந்துப் பரிமாற்றங்களில் 203 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து 96 ஓட்டங்களால் படு தோல்வியடைந்தது.
பந்து வீச்சில் தென்னாப்பிரிக்கா சார்பில் இம்ரான் தாஹூர் நான்கு இலக்குக்களையும் மொறிஸ் மூன்று இலக்குக்களையும் கைப்பற்றினார்கள். ஆட்ட நாயகனாக இம்ரான் தாஹிர் தெரிவானார்.
0 comments:
Post a Comment