கனகராயன்குளம் பாடசாலை அதிபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்! விளக்கமளிக்க அதிபர் மறுப்பு


பாடசாலையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வின்போது உயர்தர மாணவனான ஜனார்த்தனனை தாக்கிய ஆசிரியர் தரம் 5 இலிருந்து தரம் 1 வரைக்கும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சித்திரம் பாடங்களை கற்றுக்கொடுப்பவரென்றும் அந்த ஆசிரியர் உயர்தர மாணவனை தாக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குறிப்பிட்ட ஆசிரியர் ஏற்கனவே இன்னொரு மாணவனை தாக்கியதன் காரணமாக அம்மாணவனுக்கு செவிப்பாறை கிழிந்து மாணவன் கேட்கும் சக்தியை இழந்திருப்பதாகவும் தெரிவித்த மாணவர்கள் அதிபர் இவ் விடயங்களில் நீதியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டினர்.

அத்துடன் சில வாரங்களுக்கு முன்பாக அதிபரின் காரியாலயத்தில் வைத்து மாணவத் தலைவன் ஒருவர் ஆசிரியர் ஒருவரால் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ள போதும் அச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை அதிபரால் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தனர்.

அஞ்சலி நிகழ்வுக்கு மாணவர்கள் செல்வதில் பாடசாலையில் இழுபறி நிலைமை காணப்பட்டதுடன் பாடசாலையின் நிலைமைகளை அவதானிக்கவும் அதிபரிடம் விளக்கம் கேட்கவும் சென்றிருந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் தனக்கு அதிபர் சரியான பதில்; வழங்கவில்லை என்றும் அதிபரின் காரியாலயத்தில் தன்னை காத்திருக்க வைத்துவிட்டு அவர் வெளியே சென்று விட்டார் என்றும் அதிபரின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என விசனம் வெளியிட்டார்.

பாடசாலையை சுற்றி அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததையும் புலனாய்வுத்துறையினரின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்த நிலையில்
மாணவனின் மரணம் தொடர்பாக நீதி கோரியும் குறிப்பிட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும்,அதிபர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவுடன் (02-06) பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவேளையில் பழைய மாணவர்களின் அமைப்பிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட அதிபர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டால் பொலிசாரால் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்பதுடன் இறந்த மாணவனின் இறுதிக்கிரிகைகள் நடைபெறாமல்போகும் என எச்சரிக்கை செய்ததாகவும் ஊடகவியலாளருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது

இம் முறைப்பாடுகள் தொடர்பாக விளக்கம் கேட்பதற்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் பாடசாலை அதிபர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என எதேச்சதிகார முறையில் மறுத்திருந்தார்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் உயர்தரம் கற்று வந்த மாணவனான தர்மராசா ஜனார்த்தனன் ஆசிரியர் தாக்கியதில் மனமுடைந்து (31-05-2017) அன்று தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து பாடசாலையின் அதிபர் மீது மாணவர்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment