வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் நிலைப்பாடு தொடர்பில் அறியமுடியவில்லை. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 22 உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நிலையில் புதன்கிழமை இரவு அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் வடமாகாண ஆளுனரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்த மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தனர்.
குறித்த உறுப்பினர்கள் ஆளுனரின் வாசஸ்தலத்தை விட்டு வெளியேறிய சில நொடிகளில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆளுனரை சந்திக்க சென்றார். அதன் போது ஊடகவியலாளர்கள் எதிர்க்கட்சி தலைவரிடம் அங்கு வருகை தந்தமை தொடர்பில் கேட்ட போது , ஆளுனர் சந்திக்க வேண்டும் என கோரியமையால் தான் இங்கே வந்தேன் என தெரிவித்து ஆளுனரை சந்திக்க சென்றார். அதனால் எதிர்கட்சி தலைவரின் நிலைப்பாட்டினை அறிய முடியவில்லை

0 comments:
Post a Comment