அமைச்­சர்­க­ளைப் பதவி நீக்­கு­வது குறித்து நானே முடிவெடுப்பேன்!

 அமைச்­சர்­க­ளைப் பத­வி­யில் இருந்து நீக்­க­வேண்­டும் என்ற பரிந்­துரை குறித்து நான்தான் இறுதி முடி­வெ­டுப்­பேன் என நேற்று மாகாண சபை­யில் ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.
“அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் என்ன நட­வ­டிக்கை எடுக்­க­லாம் என்­பது பற்றி நானே தீர்­மா­ னிக்­க­வேண்­டும். எனி­னும் நான் தீர்­மா­னிக்க முன் சபை­யி­ன­ரின் கருத்தை அறிய ஆவ­லாய் இருக்­கின்­றேன்” என்று முத­ல­மைச்­சர் குறிப்­பிட்­டார்.
அமைச்­சர்­கள் மீதான விசா­ர­ணைக் குழு அறிக்­கையை, வடக்கு மாகாண சபை­யில் சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
ஊட­கங்­க­ளுக்கு தக­வல் வழங்­கக் கூடாது பல வித­மான குற்­றச்­சாட்­டுக்­கள் எமது அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­கக் கிடைத்­த­தன் விளை­வாக நாம் ஒரு விசா­ர­ணைக் குழுவை அமைத்­தோம். அதில் இரு­வர் ஓய்வு பெற்ற மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள். ஒரு­வர் இளைப்­பா­றிய இலங்கை நிர்­வாக சேவை­யின் மூத்த அதி­கா­ரி­யா­வார். விதி­மு­றைக் குறிப்­புக்­கள் கொடுக்­கப்­பட்டு அவற்­றின் அடிப்­ப­டை­யில் மூடிய அறை­யில் விசா­ர­ணை­கள் நடை­பெற்­றன. ஊட­கங்­க­ளுக்­குத் தக­வல்­கள் வழங்­கப்­ப­டாது என்ற நிபந்­த­னை­யின் பேரில் விசா­ர­ணை­கள் நடை­பெற்­றன. தற்­போது அவர்­க­ளின் அறிக்கை பெறப்­பட்­டுள்­ளது.
குற்­றச்­சாட்­டுக்­கள் விவ­ரம்
மீன்­பிடி அமைச்­ச­ருக்கு எதி­ராக 4 குற்­றச்­சாட்­டுக்­க­ளும், சுகா­தார அமைச்­ச­ருக்கு எதி­ராக 5 குற்­றச்­சாட்­டுக்­க­ளும், கல்வி அமைச்­ச­ருக்கு எதி­ராக 9 குற்­றச்­சாட்­டுக்­க­ளும், விவ­சாய அமைச்­ச­ருக்கு எதி­ராக 10 குற்­றச்­சாட்­டுக்­க­ளும் கிடைக்­கப் பெற்­றன. நான்கு அமைச்­சர்­க­ளும் குழு­வின் அதி­கா­ரத்தை ஏற்­றுச் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார்­கள். சாட்­சி­ய­ம­ளிக்க அவர்­கள் பின்­நிற்­க­வில்லை. குறித்த குற்­றச்­சாட்­டுக்­கள் சம்­பந்­த­மான அறிக்­கையை இந்­தச் சபை முன் சமர்ப்­பிக்க முன் சில விட­யங்­க­ளைப் பகிர்ந்து கொள்­வது நன்மை பயக்­கும் என்று நம்­பு­கின்­றேன்.
விசா­ர­ணைக் குழு அங்­கத்­த­வர்­கள் வடக்கு மாகாண சபை­யின் நட­வ­டிக்­கை­கள் பற்­றி­யும் 13ஆவது திருத்­தச் சட்­டத்­தின் கீழ் அவர்­கள் கருத்­துப்­படி எமக்­கி­ருக்­கும் மிகக் குறு­கிய அதி­கா­ரங்­கள் பற்­றி­யும் ஆளு­ந­ரின் அதி­கா­ரங்­கள் பற்­றி­யும் பல்­வேறு கருத்­துக்­க­ளைத் தம் அறிக்­கை­யில் முன் வைத்­துள்­ளார்­கள். அவை எம்­மால் பரி­சீ­லிக்­கப்­பட வேண்­டி­யவை.
முறைப்­பாட்­டா­ளர்­கள் வரா­த­தால் சில அமைச்­சர்­கள் பேரி­லான குற்­றச்­சாட்­டுக்­கள் சம்­பந்­த­மா­கச் சாட்­சி­யம் கிடைக்­க­வில்லை என்று கூறி­யுள்­ளார்­கள். மற்­றை­ய­வர்­கள் சம்­பந்­த­மான தவ­று­கள் பல எடுத்­துக் காட்­டப்­பட்­டுள்­ளன. அதி­கா­ரத் துஷ்­பி­ர­யோ­கம் பற்­றிக் கூறி­யுள்­ளார்­கள். பண விர­யம் பற்­றிக் கூறி­யுள்­ளார்­கள். அதி­கார வரம்பை மீறி­யுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்­கள். மேலும் பல தவ­று­கள் பற்­றிக் கூறி­யுள்­ளார்­கள்.
நான்­தான் தீர்­மா­னிக்க வேண்­டும்
பொது­வா­கக் குற்­றச்­சாட்­டுக்­கள் எமது உறுப்­பி­னர்­க­ளா­லேயே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. உறுப்­பி­னர்­கள் நால்­வ­ரான அமைச்­சர்­கள் மீது மற்­றைய சில உறுப்­பி­னர்­கள் குற்­றஞ்­சாட்டி அவை சம்­பந்­த­மாக சுதந்­தி­ர­மான விசா­ரணை நடத்­தப்­பட்டு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. விதப்­பு­ரை­க­ளை­யும் விசா­ர­ணைக் குழு­வி­னர் தந்­துள்­ளார்­கள். அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் என்ன நட­வ­டிக்கை எடுக்­க­லாம் என்­பது பற்றி நானே தீர்­மா­னிக்­க­வேண்­டும்.
எனி­னும் நான் தீர்­மா­னிக்க முன் சபை­யி­ன­ரின் கருத்தை அறிய ஆவ­லாய் இருக்­கின்­றேன். அத்­து­டன் அறிக்­கை­யில் இருப்­பவை பற்றி சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் சபை­யில் விளக்­க­ம­ளிக்க அவ­கா­சம் அளிக்க வேண்­டும் என்­றும் அபிப்­பி­ரா­யப்­ப­டு­கின்­றேன்.
ஏனென்­றால் சில விட­யங்­கள் விசா­ர­ணைக் குழு­வி­னால் கவ­னத்­துக்கு எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென்றோ தவ­றான முடி­வுக்கு அவர்­கள் வந்து விட்­டார்­கள் என்றோ பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளால் கருத்­துக்­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.
நாங்­கள் ஈடு­பட்­டுள்ள இந்­தச் செயல்­முறை பொது­வாழ்­வில் உள்­ள­வர்­கள் வெளிப்­ப­டைத்­தன்­மைக்­கும் பொறுப்­புக் கூற­லுக்­குந் தம்மை முன்­னி­றுத்த முன்­வ­ர­வேண்­டும் என்ற கருத்தை முன்­னி­லைப் படுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.
மக்­கள் நம்­பிக்­கையை வீண­டிக்­கக் கூடாது
மக்­கள் எம்­மைத் தேர்ந்­தெ­டுக்­கும் போது எங்­கள் மீது அவர்­க­ளுக்கு பல எதிர்­பார்ப்­புக்­கள் இருந்­தன. நேர்­மை­யான, ஊழ­லற்ற, பக்­க­சார்­பற்ற, கண்­ணி­ய­மான ஒரு நிர்­வா­கத்தை நாம் அவர்­க­ளுக்­குக் கொடுப்­போம் என்ற எதிர்­பார்ப்பே அது. புதிய ஒரு அமைப்­பான வடக்கு மாகாண சபை­யைக் கையேற்­ற­போது நாம் ஒரு நம்­பிக்­கைப் பொறுப்பை ஏற்­றுக் கொண்­டோம்.
ஆகவே நம்­பிக்­கைப் பொறுப்­பா­ளர்­கள் என்ற முறை­யில் நேர்மை, பக்­க­சார்­பற்ற தன்மை, பொறுப்­புக் கூறல், பொறுப்­பாக நடந்­து­கொள்­ளல் மற்­றும் மக்­க­ளின் நலன்­க­ளைப் பாது­காப்­பது போன்ற குணா­தி­ச­யங்­களை மக்­கள் எங்­க­ளி­டம் எதிர்­பார்த்­துள்­ளார்­கள்.
அந்த நம்­பிக்­கையை நாங்­கள் மழுங்­க­டிக்­கும் வண்­ணம் நடந்து கொள்­ளக் கூடாது என்ற கருத்தை வலி­யு­றுத்­தவே மேற்­படி விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. எம்­மி­டம் குறை­பா­டு­கள் இருப்­பின் அவற்றை நிவர்த்தி செய்­யவே இந்த விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. எம்மை நாமே ஒழுக்­கப்­ப­டுத்த அல்­லது எமது நட­வ­டிக்­கை­களை மீளாய்வு செய்ய இந்த வழி­முறை உத­வி­யது.
விசா­ரணை அறிக்­கை­யில் குறை­பாடு
கொழும்பு அர­சும் வெளிப்­ப­டைத் தன்­மை­யை­யும் பொறுப்­புக் கூற­லை­யும் தமது நிர்­வா­கத்­தில் உள்­ள­டக்­கு­வ­தா­கவே கூறிப் பத­விக்கு வந்­தது. அந்த வகை­யில் எங்­கள் வட­மா­கா­ணம் வேறெந்­தக் குறை­கள் இருப்­பி­னும் அடிப்­படை விட­யங்­க­ளில் சறுக்­கி­வி­டக் கூடாது. அதி­கா­ரத் துஷ்­பி­ர­யோ­கம், பண­வி­ர­யம், அதி­கார வரம்பு மீறல், பக்­கச் சார்­பான நட­வ­டிக்­கை­கள் போன்­றவை எமது நிர்­வா­கத்­தைக் கேள்­விக் குறி­யாக்­கி­வி­டு­வன.
நாம் எமது குறை­பா­டு­க­ளைச் சீர்­செய்ய வேண்­டும். அதே­நே­ரம் விசா­ர­ணைக் குழு­வின் அறிக்­கை­யில் முன்­கூ­றி­ய­வாறு பல குறை­பா­டு­கள் சுட்­டிக் காட்­டப்­பட்­டுள்­ளன. உதா­ர­ணத்­திற்கு நான் வரு­கை­த­ராத ஒரு கூட்­டத்­திற்கு நான் சென்­றி­ருந்­தேன் என்று கூறப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான பல விட­யங்­கள் சம்­பந்­த­மாக எமது அமைச்­சர்­கள் கேள்­வி­களை எழுப்­பவோ விளக்­க­ம­ளிக்­கவோ நாம் இட­ம­ளிக்க வேண்­டும். எந்த விட­யத்­தி­லும் மேன் முறை­யீடு செய்ய வசதி அளிக்­கப்­ப­டும். அதை­யெட்­டியே இந்­தக் கோரிக்­கையை விடுக்­கின்­றேன்.
மீண்­டும் விசா­ரிப்­பதா ?
முறைப்­பாட்­டா­ளர்­கள் வருகை தரா­த­தால் கைவி­டப்­பட்ட விசா­ர­ணை­களை மீண்­டும் உயிர் கொடுக்க வேண்­டு­மென்­றால் அத­னைச் செய்­ய­வும் நாங்­கள் தவ­றக்­கூ­டாது. சபை­யின் கௌர­வத்­தைப் பாது­காக்­கும் பொறுப்பு உங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இருக்­கின்­றது. எந்த ஒரு விவா­த­மும் தனிப்­பட்ட ரீதி­யாக எவ­ரை­யும் தாக்­கு­வ­தாக அமை­யக்­கூ­டாது.
ஒரு விட­யம் நடந்­ததா இல்­லையா என்­பதை அறி­வதே எமது குறிக்­கோ­ளாக இருக்க வேண்­டும். தனிப்­பட்ட முறை­யில் எவ­ரை­யும் தாக்­கு­வ­தை­யும் அவர்­கள் மனத்­தைப் புண்­ப­டுத்­து­வ­தை­யும் தவிர்த்­துக் கொள்ள வேண்­டும். இனி­யா­வது தனிப்­பட்ட முறை­யில் உறுப்­பி­னர்­க­ளைத் தாக்­கு­வ­தைத் தவிர்ப்­போ­மாக!
ஊட­கங்­க­ளி­டம் கொடுப்­பது  மாகா­ண­ச­பைக்கு இழுக்கு
உங்­கள் அனை­வ­ரி­லும் உள்ள நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் அறிக்­கை­யின் பிர­தி­யைச் சபைக்­குக் கைய­ளிக்­கின்­றேன். இந்த அறிக்கை அந்­த­ரங்­க­மா­னது. ஊரைக்­கூட்டி உங்­கள் உரை­களை ஊர­றிய ஊட­கங்­க­ளுக்­குக் கைய­ளிப்­பது எமது வடக்கு மாகாண சபைக்கே இழுக்கை ஏற்­ப­டுத்­தும். குற்­ற­மற்­ற­வர்­களே மேரி மக்­டெ­லின் மீது முதற்­கல் எறிய முன்­வா­ருங்­கள் என்­றார் இயே­சு­கி­றீஸ்து நாதர்.
குற்­றஞ்­சாட்­டு­வ­தால் அர­சி­யல் இலா­பம் பெற­வி­ழை­வோர் தமது நட­வ­டிக்­கை­களை மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்த முன்­வ­ர­வேண்­டும். நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் செயல்­பா­டு­கள் எம் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் உள்­ள­டக்­கி­யது என்­பதை மற­வாது இருப்­போ­மாக – என்­றார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment