தனது பதக்கத்தின் பெறுமதியை உலகம் அறிந்து கொண்டுள்ள போதிலும் இலங்கை விளையாட்டுதுறை அமைச்சர் அறிந்து கொள்ளாமை கவலையளிப்பதாக உள்ளது என இலங்கை குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், இன்று (புதன்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் மூலம் இவ்வாறு, குறிப்பிட்டார்.
மேலும் தனது பதக்கத்தை 25 கோடி ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தனது ஒலிம்பிக் பதக்கத்தை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வருவதாக அவர் இதன்போது கருத்து தெரிவித்திருந்தார்.

0 comments:
Post a Comment