தற்போது அட்லீ இயக்கத்தில் பிஸியாக நடித்து வரும் விஜய் இந்த படத்திற்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸின் படத்தில் நடிக்க இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கத்தி, துப்பாக்கி இரண்டு படங்களுமே சமூக நலனை மையமாக கொண்ட படங்கள், இதற்கடுத்து இருவரும் இணையும் விஜய்-62 படமும் சமூக நலனை மையமாக கொண்ட படம் தான் செய்தி உலா வர தொடங்கியுள்ளது.
இந்த படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அட்லீயின் படமும் அதே மாதத்தில் வெளிவரயுள்ளது.
விஜய்-62 படத்தை மீண்டும் லைக்கா நிறுவனமே தயாரிக்கயுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment