தான் வித்தியாவைக் காதலித்தபோதும் வித்தியா வித்தியா தன் காதலை ஏற்றுக்கொள்ளாததால் வித்தியாவை பழிவாங்குவதற்காக கடத்துவதற்கு 06 ஆவது எதிரியான பெரியதம்பி எனப்படும் சிவதேவன் துஷாந்த் திட்டம் தீட்டியிருந்ததாக ஐந்தாம் சாட்சியான அரச தரப்பு சாட்சியம் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து தான் திறந்த நீதிமன்றில் சாட்சியம் அளித்தால் தனது தாயிற்கும் தங்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவித்ததால் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு மூடிய நீதிமன்றில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியில் இரண்டாம் மாடியில் ட்ரயலட் பார் முறையில் நடைபெற்று வருகின்றது. இன்று இரண்டாவது நாள் விசாரணைகள் ஆரம்பமாகியது. அதன்போது ஐந்தாம் சாட்சியான அரச தரப்பு சாட்சியம் தனது சாட்சியத்தை முன்வைத்தார். அவர் தனது சாட்சியத்தில்,
பெரியாதம்பி ( 06 ஆவது எதிரியான சிவதேவன் துஷாந்த் ) வித்தியாவைக் காதலித்தார். வித்தியா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து வித்தியா பின்னால் சென்றுவரவே ஒருநாள் வித்தியா செருப்பை எடுத்துக் காட்டினார். அதன்பின் ஒருநாள் வித்தியா வீட்டிற்கு என்னையும் அழைத்துக்கொண்டு பெரியதம்பி சென்றபோது அங்கு யாரும் இல்லை. நாங்கள் வழமையாக மாப்பிள்ளை ( நடராசா புவனேஸ்வரன்) என்வரிடம் கள்ளு வாங்கிக் குடிப்பது வழமை அங்கு கொழும்பிலிருந்து வந்திருந்த சந்திரகாசன், நிசாந்தன், கண்ணன், சசி ஆகியோரும் வந்திருந்தனர். அங்கு வித்தியா தனக்கு செருப்புக் காட்டியதைக் குறிப்பிட்ட பெரியதம்பி வித்தியாவை ஏதாவது செய்யவேண்டும் எனக் கூறினான். அதன்போது ரவி வித்தியாவை தான் தூக்கித் தருவதாக கூறினான். தேவைப்படும்போது கூறுகிறேன் எனக் கூறிய பெரியதம்பி பின்னர் ஒருநாள் கள்ளுக் குடிப்பதற்காக கூடியபோது வித்தியாவை தூக்கித் தருமாறு ரவியிடம் கேட்டான். ரவி அதற்கு 23 ஆயிரம் ரூபா பணம் கேட்கவே பணத்தினை ஏற்பாடு செய்து கொடுத்தான் என சாட்சியமளித்துள்ளான்.
இதன் பின்னராக என்ன நடந்தது என்பது தொடர்பில் தன்னால் கூற முடியாது என்றும் அதனால் தனது தாயிற்கும் தங்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் 5 ஆவது சாட்சியம் கூறியதால் அனைவரையும் வெளியேற்றி மூடிய அமர்வாக அவரது சாட்சியம் பெறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment