பதவியேற்றனர் புதிய அமைச்சர்கள்! (VIDEO)


வடமாகண புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். அனந்தி சசிதரன் – மகளிர் விவகாரம், புனருத்தாபனம், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு விநியோகம், வழங்கல் மற்றும் விநியோகம், கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றார். கந்தையா சர்வேஸ்வரன் – கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், கலாசார நடவடிக்கை அமைச்சராகப் பதவியேற்றார்.

இதேவேளை, நிதி மற்றும் திட்டமிடல், சட்ட ஒழுங்கு, காணி, மின்சாரம், வீடமைப்பு, உல்லாசப் பயணம், மாகாண சபை, மாகாண நிர்வாகம், கமநல சேவை, கால்நடை, நீர்ப்பாசனம், நீரியல்வளம் மற்றும் சுற்றாடல் அமைச்சராக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.





Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment