மட்டக்களப்பு வன இலாகாப் பிரிவிற்குட்பட்ட, ஏறாவூர் பதுளை வீதியை அண்டிய, கித்துள் குளத்தினருகே இந்த சடலத்தை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கக் கூடும் என நம்பப்படும் இந்த காட்டு யானை, இயற்கையாக இறந்ததா, அல்லது கொல்லப்பட்டதா என்பது குறித்த விசாரணைகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) கித்துள் குளத்திற்கு சென்ற மீனவர்கள் சிதைவடைந்த நிலையில் கிடந்த காட்டு யானையின் சடலத்தைக் கண்டதுடன், அது குறித்து அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸாருடன் இணைந்து வன இலாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.



0 comments:
Post a Comment