யாழ்ப்பாணத்தின் முன்னணிக் கல்லூரிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தரம் 01 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
விண்ணப்பப் படிவங்களை கல்லூரியின் ஆரம்பப் பிரிவு அலுவலகத்தில் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்த பின்னர் விண்ணப்பிக்குமாறு கல்லூரியின் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, விண்ணப்பப் படிவத்துடன் உரிய ஆவணங்களையும் இணைத்து இந்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாகக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவில் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், குறித்த திகதியின் பின்னர் ஒப்படைக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment