நல்லூர் பிரதேச செயலக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து சமய அறநெறி கல்வி வாரத்தை முன்னிட்டு இந்து சமய அறநெறி கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை இடம்பெற்றது.
நல்லூர் பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் நல்லூர் ஆலயம் வரை சென்று அங்கு பூசை வழிபாடுகள் இடம்பெற்று மீண்டும் நடைபவனி நல்லூர் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
நல்லூர் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற இந்துசமய அறநெறி கல்வி விழிப்புணர்வு ஊர்வலத்தில் இந்து சமயதலைவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள். ஆசிரியர்கள் ஆலய தர்மகத்தாக்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தினர்.







0 comments:
Post a Comment