கிளிநொச்சி கல்லாறு பகுதியில் சுமார் 40 பவுணுக்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் மற்றும் 4 இலட்சம் ரூபாய் பணம் என்பன ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளன.
குறித்த பகுதியிலுள்ள தனியார் வர்த்தக நிலையமொன்றை உடைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை உட்சென்ற குழுவொன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த மற்றுமொருவர் மீது தாக்குதல் நடத்தி, பணம் மற்றும் அங்கிருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளது.
தொடர்ந்து கடை உரிமையாளரை ஆயுத முனையில் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற கொள்ளையர்கள், வீட்டார் கதவை திறப்பதற்கு முன்னர் பின் கதவை உடைத்து உட்சென்று, அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் ஆயுத முனையில் அச்சுறுத்தியதால் அயலவர்களின் உதவியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



0 comments:
Post a Comment