இராணுவத்தின் வசமுள்ள கேப்பாப்பிலவு கிராமத்தின் பிரதான வீதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கலை முன்னிட்டு தற்காலிகமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ள வீதி நாளை மறுதினம் மீண்டும் மூடப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தமது சொந்த நிலத்தில் மீண்டும் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று 103 நாளாகவும் மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment