அக்குரஸ்ஸ திப்பொட்டுவாவ பகுதியில் 15 அடி நீளமான முதலையொன்று பிரதேச மக்களின் தகவலையடுத்து பிடிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளின் உதவியுடன் வனவிலங்கு அதிகாரிகளால் மேற்படி முதலை இன்று (செவ்வாய்க்கிழமை) பிடிக்கப்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர், தனது காலிற்கடியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதோ கிடப்பதை உணர்ந்து பார்த்த போது, இராட்சத முதலையொன்று இருப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறி பிரதேச மக்களிடம் தெரிவித்ததையடுத்து குறித்த முதலை, சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்கு பின்னர் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment