வடக்கு மாகாண பட்டதாரிகளின் போராட்டம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நூறாவது நாளை எட்டியுள்ளதை முன்னிட்டு விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
அரச சேவையில் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி பெப்ரவரி மாதம் 27ம் திகதி வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தினரால், யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த தொடர்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளது.
இந்நிலையிலேயே சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் வாயில் கறுப்புத்துணிகளைக் கட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, தமது கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் விரைவில் நிறைவேற்றித்தரவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதேவேளை பிரதமரின் யாழ். விஜயத்தின்போது தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக முதற்கட்டமாக ஆயிரம் பட்டதாரிகளை உள்ளீர்ப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
தொடர்போராட்டத்தை முன்னெடுத்துவரும் பட்டதாரிகளை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் இரா.சம்பந்தன், பட்டதாரிகள் விடயத்தில் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள குறிப்பிடத்தக்கது.







0 comments:
Post a Comment