வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இன்று (06-06) மதியம் 1.30 மணிக்கு பாரிய தீ விபத்து ஏற்பட்டதுடன் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
கணணி உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையிலேயே மேற்குறிப்பிட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிசாரும் பொது மக்களும் இணைந்து சுமார் ஒரு மணிநேரத்துக்க மேலாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக விரைந்த வவுனியா நகரசபையின் தீ அணைப்பு வண்டி தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி தீயை அணைத்துள்ளனர்.
தீ ஏற்பட்ட கடைத்தொகுதியில் பாரிய இரண்டு வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்திருந்த வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜியமுனி நிலைமையை நேரில் அவதானித்ததுடன் தீ ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.




0 comments:
Post a Comment