இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் வெற்றியாளர் கிண்ணப்போட்டியின் முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இடம்பெற்றது.
இங்கிலாந்தின் கார்டிவ் மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
ஜொனி பெரிஸ்டோ 43 ஓட்டங்களையும், இயோன் மோர்கன் 33 ஓட்டங்களையும் மற்றும் பென் ஸ்டொக் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் ஹசன் அலி 3 விக்கட்டுக்களையும் மற்றும் ஜுனைத் கான் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு 212 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 37.1 ஓவர்கள் நிறைவில் 215 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் அசார் அலி 76 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டார்.
பஹார் சமான் 57 ஓட்டங்கள்.
பாபர் ஹசாம் 38 ஓட்டங்களுடனும் , ஹப்பீஸ் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வெற்றிக்கு வித்திட்டனர்.
இதேவேளை , நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment