ஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் மீது கடந்த 09ம் திகதி தாக்குதல் நடத்திய ஆசிரியருக்கு எதிராக குறித்த பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இனைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டசெய்தியினை சேகரிக்கசென்ற இரண்டு ஊடகவியலாளர் மீது சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் குழாம் ஒன்று தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் அமரேசன் அனுஷான் என்ற மாணவன் மீது ஆங்கிலபாட ஆசிரியர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குறித்த மாணவன் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் செய்யபட்ட முறைபாடு தொடர்பில் குறித்த ஆசிரியர் கைது செய்யபட்டு ஹட்டன் நீதவான் டி.சரவனராஜா முன்னிலையில் அஜர்படுத்தபட்ட போது எதிர்வரும் 19ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள அசிரியர் பொகவந்தலாவ மோரா தோட்டத்ததைச் சேர்நத இராம ஸ்ரீ ராமசந்திரன் என தெரிவிக்கப்பட்டது.
எனவே தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தொடர்நதும் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில் தொடந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
ஏன் தாக்குதல் நடத்தினீர்கள் என்ற விடயத்தை அறிய சென்ற குறித்தபாடசாலையின் பழயமாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டபிறகு ஆர்பாட்டம் ஒன்றையும் ஒன்றையும் மேற்கொண்டனர்.
ஆர்பாட்டம இடத்திற்கு சென்று செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்களான இந்திக்க ரோஷான் களுவாராச்சி, மற்றும் எஸ்.சதீஸ்குமார் ஆகிய இரண்டு ஊடகவியாலாளர்கள் மீது குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாம் தாக்குதல் நடத்தி தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர் இருவரையும் சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தாகள் மிட்டெடுத்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த பாடசாலையின் ஆசிரியர்களின் சேவைக்கு இடையுர் விளைவித்துள்ளதாக சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாளயத்தின் அதிபர் கோடிஸ்வரன் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையம் பதிவு செய்துள்ளனர்.
குறித்த பாடசாலையின் பழயமாணவர்களும் பெற்றோர்களும் குற்றம் சுமத்துகின்றனர் சேவையில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் மது போதையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரியவருகிறது.
0 comments:
Post a Comment