மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
08.06.2017 வியாழக்கிழமை மாலை பங்குத்தந்தை அருட்பணி றோசான் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா 10.06.2017 சனிக்கிழமை மாலை புனிதரின் திருச்சொரூப பவனியும் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.
ஆலய திருவிழா திருப்பலி 11.06.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை அருட்பணி நவரெட்ணம் அடிகளாரின் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி றோசான் , அருட்பணி லோரன்ஸ் , அருட்பணி நோட்டன் ஜோன்சன் , ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர்
திருப்பலியினை தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு விசேட திருச்சுருப ஆசிர்வாதத்துடன் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது.
இந்த திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் கல்லடி , டச்பார் பகுதி பங்கு மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment