கிழக்கு பல்கலைக்கழகம் முன்பாக மனித சங்கிலி போராட்டம்!


கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று (12) திங்கள் கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

கடந்த 28ம் திகதி திருகோணமலை மூதூர் பெருவெளிப் பகுதியில் மூன்று பாடசாலைச் சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மனித சங்கிலி போராட்டம் நடாத்தப்பட்டது.

கிழக்கு பல்கலைகழக கலை கலாசார பீட மாணவர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள், இளைஞர்கள், கிழக்கு பல்கலைகழக கலைகலாசார பீடத்தில் கற்கும் தமிழ் மாணவர்கள் என அதிகளவானோர் மனிதச் சங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடபட்டவர்களினால் மல்லிகைத்தீவுப் பகுதியில் மூன்று பாடசாலை  சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment