கல்வி இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் விபத்து!


கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனம் (20) இன்று காலை விபத்துக்கு  உள்ளானதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்புக்கு மாவட்டத்திற்கு  விஜயத்தை மேற்கொண்டுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர்   மையிலம்பாவெளி பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு   மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த  வேளையில்  மயிலம்பாவெளி  பிரதான வீதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்  

அமைச்சர் பயணம் செய்த வாகனமும்  அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணித்த  வாகனமும்  ஒன்றுடன் ஒன்று மோதியதியதன் காரணமாக  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது  இதன் காரணமாக  இரு வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்

வாகனத்தில் பயணித்த  அமைச்சருக்கோ அல்லது வாகனங்களில் பயணம் செய்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கோ  எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர் 

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை  ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment