தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் திகம்பதஹா - ஹவுடன்கொடை பிரதேசத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உடல் சிதறி பலியானார்கள்.
குறித்த இளைஞர்கள் பயணித்த உந்துருளி பாரவூர்தியொன்றுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் தம்புள்ள பகுதியை சேர்ந்த 22 வயதான தரங்க தனஞ்சயன் மற்றும் மாத்தளை பகுதியை சேர்ந்த சமன் அகில ஆகிய இரு இளைஞர்களுமே பலியாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை,, விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் குறித்த இளைஞர்களுக்கு தம்புள்ளை காவற்துறையால் அபராத பத்திரிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், பின்னர் விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சீகிரிய காவற்துறையால் அதிக வேகத்தில் பயணித்த அவர்கள் நிறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றையும் மீறி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் பாரவூர்தியியில் நேருக்கு நேர் வேகமாக மோதி சின்னாபின்னமானதுடன் தீப்பிடித்து பற்றி எரிந்தது சாம்பலானது என தெரியவருவதாக செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment