உலகம் முழுவதும் ராணுவ தளங்களை சீனா உருவாக்கி வருகிறது என்று அமெரிக்க ராணுவ தலைமைச்செயலகமான பெண்டகன் கூறியுள்ளது.
எதிர்காலத்தில் சீனாவின் ராணுவ தளத்துக்கு சாத்தியமான இடமாக பாகிஸ்தான் இருக்கும் எனவும் பெண்டகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெண்டகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலில், "எதிர்காலத்தில் சீனாவின் ராணுவ தளத்துக்கு சாத்தியமான இடமாக பாகிஸ்தான் இருக்க வாய்ப்புள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான டிஜிபூட்டியில் ராணுவ தளங்களை சீனா அமைத்து வருவதை முடித்த பின்னர், தனது ராணுவ தளங்களை உலகம் முழுவதும் சீனா விரிவுபடுத்த வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டில் சீனாவின் ராணுவ முன்னேற்றம் தொடர்பாக பெண்டகன் தயாரித்த 97 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், "பாகிஸ்தான் போன்று நீண்ட காலமாக நட்பு பேணி வரும் நாடுகளில் கூடுதலான ராணுவ தளங்களை அமைக்க சீனா முற்படும்.
இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள வங்கதேசம், இலங்கை, மியான்மர் ஆகிய பகுதிகள் சீனாவின் ராணுவ தலைமையகமாக மாறும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment