நுவரெலியா – டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் இன்று பகல் 2.00 மணியளவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளார்.
மோனிங்டன் தோட்டத்திற்கு உரிய பொது போக்குவரத்து இல்லாமையே இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கு காரணமென பெற்றோர்களும் மாணவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு இவ் ஆர்ப்பாட்டத்தின் போது டயகம நகரிலுள்ள 59 கடைகள் சுமார் ஒரு மணித்தியாலம் மூடப்பட்டிருந்தாகவும் கூறப்படுகின்றது.
நேற்று காலை 7.00 மணியளவில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை அதே பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவர் பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மாணவர்கள் சிலர் கூச்சலிட்டுள்ள தொடர்ந்து சந்தேக நபர் அவ்விடத்தினை விட்டு தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment