இலங்கை எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்குமிடையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றுவந்த கடிதத் தொடர்பாடல்களினால் ஏற்பட்ட சுமூக நிலையை அடுத்து வடக்கு மாகாணசபை தொடர்பில் நிலவிவந்த குழப்பங்கள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தமிழரசுக் கட்சியினர் முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலைகளையடுத்து சமரச முயற்சிக்கா சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் விட்டுக்கொடுப்புக்கள் தொடர்பில் கடிதம் மூலம் காரசாமாகவும் இணக்கமாகவும் என மாறி மாறி கதங்களை கடந்த மூன்று தினங்களாக எழுதிவந்த நிலையில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் மற்றும் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் ஆகிய இருவரதும் தலையீட்டினையடுத்து சுமூக நிலையொன்று எட்டப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இறுதியாக சம்பந்தனுக்கு இன்று நண்பகல் எழுதிய கடிதத்தில் அமைச்சர்களின் விடுமுறையில் செல்லும் கோரிக்கையை கைவிடுவதாக கூறியதையடுத்து இன்று பிற்பகல் சம்பந்தனால் விக்கினேஸ்வரனுக்கு எழுதிய கடித்தில் தான் ஆளுநரிடம் தொடர்புகொண்டு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதாக கோரியதாகவும் இரு அமைச்சர்களையும் தொடர்புகொண்டு விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை நாம் வெகுவிரைவில் நேரில் சந்தித்து பல பிரச்சனைகள் தொடர்பில் மேலதிக கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கின்றேன் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று இரவு ஊடகவியலாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் இந்தப் பிரச்சனை ஒரு சுமூகமான முடிவிற்கு வந்ததாக நாங்கள் கருதுகின்றோம் எனத் தெரிவித்தார்.
முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்னுக்கு எழுதிய கடிதம்
எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எழுதிய கடிதம்
0 comments:
Post a Comment