வடமாகாண அவைத்தலைவருக்கு சிம்மாசனம் மாற்றம்!


வட மாகாண அவைத்தலைவருக்கு  மிகவும் ஆடம்பர   நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய சிம்மாசனம்  தற்போது  உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன்   7ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை தொடர்பில்  நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் சிறப்பு அமர்வில் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் இருக்கை மாற்றப்பட்டு அவருக்கு   சிம்மாசனம் போன்ற புதிய இருக்கை ஒன்று வைக்கப்பட்டு  இப் புதிய சிம்மாசனத்தை  அவர்  பயன்படுத்தியதை காண முடிந்தது.


சோழர் காலத்து அரசர்கள் பயன்படுத்தியதை போன்று மிகவும் நுட்பமான முறையில்  கலை  வேலைப்பாடுகளுடன்  அமைக்கப்பட்டுள்ள ஆசனம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

 இதற்கு முன்னர் இரண்டு இருக்கைகள்  வாங்கப்பட்ட நிலையில்  அவை அவருக்கு  வசதியீனமாக இருப்பதாகக் கூறியே கடந்த அமர்வில் புதிய சிம்மாசனக் கதிரை  அவைத்தலைவர்க்கென வாங்கப்பட்டு மாற்றப்பட்டது.

மேலும்    அவர்  உட்கார்ந்த  கடைசிக் கதிரை என அவைத்தலைவர்    நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். முதலமைச்சர் தொடர்பான பிரச்சரனைகளின் இழுபறி நீடித்து சி.வி.கே முதலமைச்சரானாலும் அவர் ஆசைப்பட்டு வாங்கிய அந்த சிம்மாசனத்தில் அமரப்போவதில்லை. முதல்வர் விக்கினேஸ்வரனே முதலமைச்சராக நீடித்தாலும் சி.வி.கே அவைத்தலைவராக அந்தச் சிம்மாசனத்தில் உட்கார வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.

தான் நடுநிலையான அவைத்தலைவர் என்ற நிலையைத் தியாகம் செய்தே ஆளுநரிடம் முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான பத்திரத்தை தன் கரங்களால் ஆளுனரிடம் கொடுத்திருக்கிறார்.
அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கதிரையில் அல்லவா இனி அமர முடியும் என   அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடகின்றனர்.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment