புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பை- உடப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சிறிய ரக லொறியொன்றும் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை குறித்த விபத்து சம்பவித்திருந்தது.
விபத்தில் உயிரிழந்தவர் கொத்தாந்தீவை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment