புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடப்பு பிரதேசத்தில் வைத்து சந்தேகத்திடமான முச்சக்கர வண்டியை ஒன்றை சோதனைக்குட்படுத்திய போது அவர்களிடம் இருந்து போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த சந்தேக நபர்கள் நான்கு பேர்களையும் கைது செய்த முந்தல் பொலிஸார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரனையின் போது சந்தேக நபர்களிடம் இருந்து , 5000 ரூபா மற்றும் 1000 ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்கள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி உடப்பு பிரதேசத்தில் உள்ள கடைகளில் சில பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர். இது தொடர்பாக முந்தல் பொலிஸாருக்கு வழங்கக்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவருக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சந்தேக நபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment