சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று அனைவருக்கும் உற்சாகத்தை கொடுத்தவர் தனுஷ். கண் பார்வை குறையை பொருட்படுத்தாது திறமையை காட்ட வந்ததே பாராட்ட வேண்டிய விசயம் தான்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் பாடுவதில் ஆர்வமிருந்ததால், கல்லூரி சீனியர் அண்ணாக்கள் தான் அவரின் திறமை கண்டு மேடையில் ஏற்றி விட்டனராம். இத்தனைக்கும் தனுஷ் முறையாக சங்கீதம் பாட கற்றுக்கொள்ளவில்லை.
ஆடிஷனுக்கு வந்து செலக்ட் ஆனதுமே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்களாம். கேள்வி ஞானம் மூலமும், நடுவர்கள் சொன்ன நிறை, குறைகளை எடுத்துக்கொண்டு இவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளார்.
தனுஷுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. அவர் முன்னாடி பாட வேண்டும் என ஆசையாம். அது சூப்பர் சிங்கர் மூலமா நிறைவேறிடுச்சு” என சொல்லும்போது தனுஷ் முகத்தில் அவ்வளவு பூரிப்பு.
0 comments:
Post a Comment