இங்கிலாந்தில் ஆரம்பமாகியிருக்கும் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் மோதும் சாம்பியன் கிண்ணப்போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.
இன்று இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும் ஹசல்வூட்டின் சிறப்பான பந்துவீச்சினால் 291 ஓட்டங்களுக்குள் சகல இலக்குகளையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் எட்டு நான்கு ஓட்டங்கள் மற்றும் மூன்று ஆறு ஓட்டம் அடங்கலாக நூறு ஓட்டங்களைப் பெற்று ரன் அவுட் ஆனார். லூக் ரொஞ்சி எட்டு நான்கு மற்றும் மூன்று ஆறு ஓட்டம் அடங்கலாக 65 ஓட்டங்களையும் ரெய்லர் ஆறு நான்கு ஓட்டங்களுடன் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
மழையின் குறுக்கீட்டால் இப்போட்டியானது 46 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் ஹசல்வூட் சிறப்பாக பந்து வீசி ஆறு இலக்குகளையும் ஜோன் ஹாஸ்ரிங்ஸ் இரு இலக்குகளையும் கம்மின்ஸ் ஒரு இலக்கினையும் சாய்த்தனர்.
வலிமையான துடுப்பாட்ட வரிசையை கொண்ட அவுஸ்திரேலிய அணி இவ் இலக்கினை துரத்துமா? என்பதனை பொறுத்தே அறிய வேண்டும்.
இன்னிங்ஸ் இடைவேளையின் போதும் மழை குறுக்கிட்டதால் போட்டியில் பந்துப்பரிமாற்றங்கள் குறைப்பு மற்றும் வெற்றியிலக்குகளில் மாற்றம் ஏற்படலாம்.
0 comments:
Post a Comment