'அக்ஸஸ் பிலிம்பேக்டரி' எனும் பேனரில் ஜி.டில்லிபாபு தயாரிப்பில், 'ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி நடிக்க, ஏஆர்கே.சரவன் இயக்கத்தில்., வெளி வந்திருக்கும் படமே "மரகத நாணயம்.
மன்னர் காலத்தில் மகா சமஸ்தானமாக ஆண்ட, இரும்புறை அரசனின், கல்லறையில் இருந்த மரகத நாணயம் ஒன்று. பல ஆண்டுகளாக காணாமல் போயிருக்கிறது. அதை, தொட்டவர்கள் அனைவருக்கும் துர்மரணம் நேருகிறது.
மரகத நாணயம் தேடி அதைத் தொட்டவர்களில் இது வரை132 பேரை அந்த நாணயம் பலி வாங்கியது தெரிந்தும், பத்து கோடி டீலுக்கு ஆசைப்பட்டு அந்த மரகத நாணயத்தை தூக்க களம் இறங்குகிறார்கள் ஆதியும் அவரது நண்பர் டேனியும்.
இதில், இதே மரகத நாணய தேடல்மேட்டரில் தன் மாமாவை பறி கொடுத்தவர் டேனி. மந்தரீகர் கோட்டா சீனிவாசராவின் ஆலோசனைப்படி, மரகத நாணய விவரம் தெரிந்த டேனியின் மாமாவினுடைய ஆவியை உடன் வைத்துக் கொண்டால் மரகத நாணயத்தை கைப்பற்றி விடலாம். எனும் நம்பிக்கை ஆதிக்கும், டேனிக்கும் ஏற்படுகிறது.
அதன்படி டேனி மாமாவின் ஆவியை தன் உடம்பிற்குள் மாந்தரீகர் கோட்டா, கொடுத்த எலுமிச்சை பழ உதவியுடன் இறக்கிக் கொள்ள முயலுகிறார் ஆதி. ஆனால், அந்த எலுமிச்சை பழம், எதிர்பாரத விதமாக தீடீர் மரணமடைந்த இவர்களது பாஸ் முனிஷ் காந்த் கையில் சிக்க, ஒரு மாதிரி உயிர்தெழும் அவர் டேனியின் மாமாவின் ஆன்மாவை சுமந்தபடி அடுத்த நாளே இவர்களை வந்து சேர்கிறது.
அதவும் மரகத நாணயத்தை இவர்களுக்கு எடுத்து கொடுத்தே தீருவது எனும் உறுதி மொழியுடன் இவர்களுடன் சேரும் முனிஷ், மரகத நாணய மேட்டரில் இறந்து போனதன் சகாக்கள் மேலும் சிலரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு ஆதி, டேனி இருவருடன் மரகத நாணய வேட்டையில் குதிக்கின்றது.
அதன்பின் ஆதிக்கு, அந்த மரகத நாணயம் கிட்டியதா ? அதன் வாயிலாக ஆதி கோஷ்டிக்கு பத்து கோடி பணம் கிட்டியதா ..? இல்லையா ...? .என்பது தான் "மரகத நாணயம்" படத்தின் மொத்தக் கதையும்.
செங்குட்டுவன் எனும் பாத்திரத்தில், காஸ்ட்லீ கள் கடத்தல்காரராக, கதாநாயகராக ஆதி, செம ஷார்ப்பாக ஜமாய்த் திருக்கிறார்.
சாணக்யா எனும் கேரக்டரில், ஒரு ஆணின் ஆவியை சுமந்த இளம் பெண்ணாக நிக்கி கல்ராணி "ஏய்கிழிஞ்ச வேஷ்டி யாரைப் பார்த்து பொணங்கற " என மிரட்டுகிறார்.
ஒரு மைக்கும் ஸ்பீக்கர் செட்டும், யூனிபார்ம் போட்ட நான்கைந்து அடியாட்களை அனுப்பி வில்லன் டிவிங்கிள் ராமநாதன் - ஆனந்தராஜ் , செய்யும் அடாவடித்தனம், வில்லத்தனம், ரவுடித்தனம் அனைத்தும் ஏ ஒன் காமெடி ரக அசத்தல்.
இதுவரை நடந்ததை எல்லாம் நினைத்து, கவலைப்படாதீங்க இந்த பணத்தை வச்சிகிட்டு நல்ல விதமா வாழுங்க என வாழ்த்திவிட்டு நீங்க அழுதுட்டீங்க, நான் ஆவி என்பதால் எனக்கு அழுகை வராது.
உடம்பில் கணணீர் கிடையாது. என முனிஷ் - ராமதாஸ் சவக்குழியில் விழுந்து, மீண்டும் சாவது உள்ளிட்ட க்ளைமாக்ஸ் காட்சியிலும், அதற்கு முந்தைய காமெடி காட்சிகளிலும், முனிஸ்காந்த் - ராமதாஸ், கலக்கியிருக்கிறார்.
அவரை மாதிரியே தமிழ் அய்யாவாக வந்து "இதைத்தான் சீத்தலை சாத்தனார் ஒரு பாடலில்" என்ற படி நீட்டி முழக்கி ஆவி தமிழ் பேசும் சங்கிலி முருகன், எந்நேரமும் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் முகபாவத்துடன் இளங்கோவாக ஹீரோ ஆதியின் நண்பராக வரும் டேனி, கரகர குரலில் நேசமணியாக வரும் அருண்ராஜா காமராஜ், மாந்திரவாதி - கோட்டா சீனிவாசராவ், நடராஜா பைலட் - பிரம்மானந்தம், பாண்டுரங்கனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், ஜானாக வரும் மைம் கோபி, அடியாளாக வரும் முருகானந்தம் ஆகிய அனைவரும் நச்சென்று நடித்து ரசிகனை டச் செய்திருக்கின்றனர்.
ஜி.கே பிரசன்னா வின் படத்தொகுப்பு படத்திற்கு பெரும் பலமான தொகுப்பு. பி வி.ஷங்கர் ஒளிப்பதிவில், "மரகத நாணயம்" மேலும் ஜொலித்திருக்கிறது. திபுநைனன்தாமஸ் இசையில், பாடல்கள் இசையும் பின்னணியும் இப்படத்திற்கு பக்கா பலம்.
ஏ ஆர்கே.சரவன் எழுத்து, இயக்கத்தில், "அவன் மேட் இன் சைனா, ஐயம் மேட் இன் இந்தியா அவன் எப்பவாவது வெடிப்பான் நான் எப்பொழுதும் வெடிப்பேன்" என்பது உள்ளிட்ட காமெடி சரவெடி வசனங்கள் ரசனை.
மேலும் , ஆவி மற்றும் ஆன்மாக்களை படம் பார்ப்போர்க்கு, அலுப்பு ஏற்படாத வகையில் காட்டியிருக்கும் "மரகத நாணயம்" படத்தின் கதையையும், களத்தையும் காட்சிப்படுத்தல்களையும் எவ்வளவுக்கு எவ்வளவு காமெடியாகவும், கலர்புல்லாகவும், திகிலாகவும், தர முடியுமோ ? அவ்வளவுக்கு அவ்வளவு நேர்த்தியாகவும், நேர்மையாகவும் காட்டியிருப்பதற்காக இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்.
ஆக மொத்தத்தில் , "மரகத நாணயம்"- 'தமிழ் சினிமாவில் மேலும் ஒரு மகுடம் என்றால் நியாயம்!'
0 comments:
Post a Comment