ஊழல் மோசடி குற்றஞ்சாட்டப்பட்ட வடக்கு மாகாணத்தின் ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு விரைவில் புதிய குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய (வியாழக்கிழமை) வடக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, அமைச்சுப் பதவியை தியாகம் செய்துள்ள இரு அமைச்சர்களின் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தகைமை, பிரதேசம் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து உரியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தின் நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் விவசாய அமைச்சராக செயற்பட்ட பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சராக செயற்பட்ட த.குருகுலராசா ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனையடுத்து அவர்களின் பதவியை தியாகம் செய்துவிடுமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக இருவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாகவும் புதிய விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
]
0 comments:
Post a Comment