வடமாகாண சபையின் 97வது அமர்வுகள் இன்று இடம்பெற்று வரும் நிலையில், ஆசன ஒழுங்கமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதலாவது ஆசனம் முதலமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதலமைச்சருக்கு அடுத்தப்படியாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திற்கு ஆசனம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், பிரதி அவைத் தலைவர், முன்னாள் அமைச்சர் இருவர் என ஆசன ஒழுங்கமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முதலமைச்சருக்கு அடுத்தப்படியாக, வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசா, சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், போக்குவரத்து அமைச்சர், பா.டெனீஸ்வரன் என ஆசன ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும், வடமாகாண அமைச்சர்கள் இருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், தாமாக முன்வந்து பதவியை இராஜினாமா செய்யுமாறு முதலமைச்சர் கோரியிருந்தார்.
இதனையடுத்து, வடமாகாண சபையில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததோடு, அமைச்சர்கள் இருவரும் தமது பதவியை இராஜினாமா செய்திருந்தனர்.
இந்நிலையில், வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இன்றைய அமர்கள் இடம்பெற்று வருவதுடன், ஆசன ஒழுங்கமைப்புகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment