பிரித்தானியாவில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள London Bridge station பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென்று வெள்ளை நிற வான் ஒன்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. இதனால் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கையில், அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு வேன் மக்கள் மீது மோதியதாகவும், அதன் பின் அந்த வானில் இருந்த மர்ம நபர் மூன்று பேர் கையில் பிளேடுகள் மற்றும் கத்தியுடன் கீழே இறங்கி அங்கிருந்த மக்கள் மீது கத்தியை வைத்து குத்தியதாகவும் கூறப்படுகிறது.
கத்தியை வைத்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால், அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கிருந்து ஓடியுள்ளனர்.
மேலும் அந்த மர்ம நபர்கள் பயன்படுத்திய கத்தியின் அளவு 12- அங்குலம் இருக்கும் என்றும், இந்த கொடூர தாக்குதலால் மூன்று பேர் தொண்டையில் பலத்த காயங்களுடன் இரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென்று நடந்த சம்பவத்தால் பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்கு ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்திருப்பவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
அப்பகுதியில் உள்ள போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அப்பாலத்தை பொலிசார் மூடியுள்ளனர். அதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடுமோ என்று அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் இது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில், மான்செஸ்டர் பகுதியில் திவீரவாதி ஒருவன் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 22-பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment