இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் ஐ.சி.சி வெற்றிக் கிண்ணப் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை 8 விக்கட்டுக்களால் வெற்றிக்கொண்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கியது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 44.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்த இந்திய அணி 38 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இதன் மூலம் பீ. பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment