மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிந்தனை திறன் பெருகும் நாள்.
ரிஷபம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி
வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்
மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிகநாட்டம் அதி கரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
கடகம்: மாலை 4.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையில் மகிழ்ச்சித் தொடங்கும் நாள்.
சிம்மம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். மனைவி வழியில் மதிப்புக் கூடும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
கன்னி: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.
துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் திருப்தி உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.
விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்து செல்லும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்
தனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு
கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.
மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் ஒத்துழைப் பார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
கும்பம்: மாலை 4.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். உடல் நலம் பாதிக்கும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
மீனம்: கணவன்-மனைவிக்குள் வாக்குவாதம் வந்து போகும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோ கத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 4.50 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.
0 comments:
Post a Comment