கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலரிற்கு “மாவா” என்கின்ற போதை வஸ்தை விற்பனை செய்த சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கண்ணவின் விசேட குழுவினரால் நேற்று திங்கள் இரவு இரணைமடுப் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த போதைவஸ்தை விநியோகிக்கின்றார் என கிராம மக்களால் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கண்ணவிற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக அப்பகுதி சிறுவன் ஒருவனுடன் சிவில் உடையில் சென்ற பொலீஸார்
ஒருவர் போதைப்பொருள் விற்பவரிடம் பணம் கொடுத்து போதைப்பொருளை பெற்றுக்கொண்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்த சம்பவத்தினை உறுதி செய்து கொண்ட நிலையில் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
0 comments:
Post a Comment