சாவகச்சேரியில் மணல் ஏற்றி வந்த உழவியந்திரம் மீது துப்பாக்கிச்சூடு!


தனங்கிளப்பில் இருந்து சாவகச்சேரிக்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு உழவியந்திரங்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நீண்ட காலமாக தனங்கிளப்பில் இருந்து வயல்வெளி ஊடாக வேலாயுதம் வீதி வழியாக சாவகச்சேரிக்கு மணல் கடத்தப்பட்டு வந்துள்ளது.

இதை முறியடிக்கும் விதமாக இன்று அதிகாலை விசேட அதிரடிப் படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். 
அதிகாலை 1.30 மணியளவில் மணல் ஏற்றி வந்த உழவியந்திரங்கள் மூன்றினை வேலாயுதம் வீதியில் வைத்து விசேட அதிரடிப் படையினர் வழிமறித்துள்ளனர்.

இதன்போது ஒரு உழவியந்திரம் தப்பிச்சென்றுள்ளது. மேலும் இரண்டு உழவியந்திரங்களை கைவிட்டுவிட்டு சாரதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

இதேவேளை அதிகாலை வேளை துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். உழவியந்திரம் ஒன்றினுடைய சக்கரங்கள் காற்றுப் போய் காலைவரை வீதியில் நின்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட உழவியந்திரங்களை விசேட அதிரடிப்படையினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில ஒப்படைத்துள்ளனர்.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment