கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது இளைஞர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்திய சம்பவமானது வவுனியா – உக்குளாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) இரவு மேற்படி சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இது தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கையோ, முறைப்பாடோ மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உக்குளாங்குளம் பிள்ளையார் கோவிலுக்கருகில் பயணித்த மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது, குறித்த மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் குறித்த கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவிலும் பதிவாகியுள்ள போதிலும், அது தெளிவற்று காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இரவு ரோந்தில் கடமையில் ஈடுபடும் பொலிஸார் துப்பாக்கிகளுடன் செல்வது குறிப்பிடத்தக்கது.
கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது இளைஞர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்திய சம்பவமானது வவுனியா – உக்குளாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு மேற்படி சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இது தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கையோ, முறைப்பாடோ மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உக்குளாங்குளம் பிள்ளையார் கோவிலுக்கருகில் பயணித்த மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அதன்போது, குறித்த மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் குறித்த கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவிலும் பதிவாகியுள்ள போதிலும், அது தெளிவற்று காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இரவு ரோந்தில் கடமையில் ஈடுபடும் பொலிஸார் துப்பாக்கிகளுடன் செல்வது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment