அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சம் பழ மரம், அதிக குளிரான பிரதேசமான நுவரெலியா மாவட்டத்திலும் வளர்ந்து காய்துள்ளமையானது அனைவரையும் வியக்கவைத்துள்ளது.
நுவரெலியா, தலவாக்கலை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் பொலிஸ் நிலையத்தில் வளர்க்கப்பட்ட இந்த மரத்திலேயே பேரீச்சம் பழம் காய்த்துள்ளது. இந்த மரத்தில் தற்போது 5 பேரீச்சம் பழ குலைகள் காய்த்துள்ளன.
குறித்த மரம் நாட்டப்பட்டு 35 வருடங்களின் பின் இந்த பேரீச்சம் பழம் காய்த்துள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




0 comments:
Post a Comment