வவுனியா ஸ்ரீ ராம்புரம் திருஞான சம்மந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று முற்பகல் 10 மணியளவில் நீர் நாய் ஒன்று புகுந்துள்ளது.
பாடசாலைக்குள் வித்தியாசமான உயிரினம் ஒன்று நடமாடியதை அவதானித்த மாணவர்கள் இது குறித்து அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் அப்பகுதி கிராம அலுவலரிடம் தெரிவித்தமைக்கு பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற கிராம அலுவலர் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்தார்.
இதனையடுத்து குறித்த பாடசாலைக்கு விரைந்து வந்த அதிகாரிகள் அதனை மீட்டு வனஜீவராசிகள் காரியாலயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். குறித்த உயிரினம் வவுனியாவில் முதன் முதலில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment