மாத்தறை, மொறவக்க பிரதேசத்தில் போதையில் வீடு வந்த மகன் தனது தாயை அடித்துக் கொலை செய்துள்ளார்.
மாத்தறை மொறவக்க கொடிகாரகொட உடகொரடுவ பிரதேசத்திலேயே நேற்றையதினம் (திங்கட்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், 45 வயதுடைய சுமனரத்ன கொடிகார என்பவரே மேற்படி கொலையைப் புரிந்துள்ளதாக மொறவக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டைப்பூட்டி வைத்து தனது 83 வயதுடைய தாயைக் கம்பியினாலும், கோடரியாலும் விடியும் வரை அடித்துத் தாக்கிய நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாத காரணத்தினால் குறித்த வயோதிபத் தாய் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மொறவக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment