வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் விடுவிக்கப்பட்ட கோரிக்கைகளை பரீசிலீத்து கால இழுத்தடிப்புகள் இன்றி தீர்மான எழுத்து மூலமான பதிலினை மேற்குறித்த துறைசார் அதிகாரிகள், மத்திய மாகாண அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகளால் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் முற்பகல் 10 மணியளவில் தமது தொடர் போராட்டதினை தொடர்ந்தனர்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்பினை வழங்கக்கோரி மத்திய மாகாண அரசுகளுக்கு கடந்த காலங்களில் பல கோரிக்கைகள் முன்வைத்த போதும் இன்று வரை வடமாகாண பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகவே உள்ளது என்று தமது ஆதங்கத்தினை தெரிவித்தனர்
வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டநிலையில் இன்றையதினம் முதல் இவர்கள் காலவரையறையற்ற போரா ட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 comments:
Post a Comment