இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஸிடீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலியா அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
புனே மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த பருவ காலத்தில் சொந்த மண்ணில் தொடர்ச்சியான 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு, ஏற்கனவே 9 டெஸ்ட் ஆட்ட்ங்கள் நிறைவுக்கு வந்துள்ளன.
இறுதி 4 டெஸ்ட் ஆட்டங்களும் ஆஸ்திரேலியாவுடனானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தே ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை ஆசிய மண்ணில் மோசமான டெஸ்ட் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், இந்திய சுற்றுலா அவர்களுக்கு இன்னும் சிக்கலை உருவாக்கும் என்றே நம்பப்படுகின்றது.
டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டி தரநிலையில் முதலிடத்தில் இருக்கும் ஸிடீவ் ஸ்மித்துக்கும், பந்துவீச்சு தரநிலையில் முதலிடத்தில் இருக்கும் அஸ்வினுக்கு இடையிலான பலத்த போட்டியாகவும் இந்த போட்டி இருக்குமென்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

0 comments:
Post a Comment