ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வென்ற தினம் இன்று!

எட்டு வருடங்களுக்கு முன்பு, இதே தினத்தில்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் பின்னணி இசை மற்றும் ஜெய்ஹோ பாடலுக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார். அதே படத்துக்காக கிராமி, பாஃப்டா எனப் பல விருதுகளை வென்று, சர்வதேச கவனத்தைப்பெற்றார், 'மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்.

2011ல் டேனிபாயல் இயக்கிய '127 ஹவர்ஸ்' படத்துக்காக, இந்த வருடம், 'பீலே' படத்துக்காக என மறுபடியும் ஆஸ்கர் விருதுக்காக ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஷங்கரின் '2.0,' விஜய்-அட்லி இணையும் படம், மஜித் மஜிதி இயக்கும் படம் என அடுத்தடுத்து பிஸியாக இருக்கிறார் இசைப்புயல்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment