இன்றைய ராசிபலன் - 05.03.2017


மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.



மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.



கடகம்:  எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.



சிம்மம்:  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நெருங்கிய வர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.



கன்னி: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணவரவு திருப்தி தரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். வேலைச்சுமை மிகுந்த நாள்.



விருச்சிகம்:  பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மனைவி வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.



தனுசு: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.



மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.



கும்பம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உழைப்பால் உயரும் நாள்.


மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment