வட இலங்கைச் சங்கீத சபையின் 21ஆவது கலாவித்தகர் பட்டமளிப்பு விழா இன்றைய தினம் பிற்பகல் 1.00 மணியளவில் மருதனார் மடம் சங்கீத சபை மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கீத சபையின் தலைவர் ந.தெய்வேந்திர்ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழகத்தின் ஒய்வுநிலை பேராசிரியர் மா.நடராஐ சுந்தரம் மற்றும் வலிகாமம் கல்விப்பணிப்பாளர் பிறேமாவதி செல்வின் இரேனியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு இசைத்துறைக்கு 7மாணவர்களும் நாடகத்துறைக்கு 4 மாணவர்களும் நடனத்துறைக்கு 30 மாணவர்களும் விருந்தினர்கள் கலாவித்தகர் பட்டத்தினை விருந்தினர்கள் வழங்கிவைத்தனர்.




0 comments:
Post a Comment