இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்டதான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு பங்களாதேஷ் அணிக்கு 457 எனும் இமாலய இலக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷ் அணியை இலங்கை அணி 259 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இலங்கை அணியின் தலைவரும் சுழல் நாயகனுமான ரங்கனை ஹேரத் புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய இடதுகை சுழல் பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஹேரத் படைத்துள்ளார்.
இதுவரை இந்த சாதனையை நியூசிலாந்து அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் டானியல் வெட்டோரி வைத்திருந்தார். அவரது 362 விக்கெட்டுக்கள் சாதனையை கடந்து 363 விக்கெட்டுக்களை ஹேரத் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment