4 வது டெஸ்ட்டில் கோஹ்லி விளையாடுவதில் சந்தேகம், மும்பையின் இளம் வீரர் அணியில் சேர்ப்பு!


இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 வதும் இறுதியான டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு மிகப்பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

அந்த அணியின் தலைவரும் முக்கிய துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லி, போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் என இந்திய கிரிக்கெட் தரப்பு செய்திகள் குறிப்பிடுகின்றன.

இரு அணிகளுக்கும் இடையில் ராஞ்சியில் இடம்பெற்ற 3 வது டெஸ்ட் போட்டியின் போது, களத்தடுப்பில் ஈடுபட்ட கோஹ்லிக்கு தோள்படடை உபாதை எற்பட்டது, அதன்பின்னர் கோஹ்லி மைதானத்தை விட்டு வெளியேற, அணியை உதவித்தலைவர் ரஹானே வழிநடத்தினார்.

நீண்டநேர ஓய்வுக்கு பின்னர் கோஹ்லி வலியுடன் துடுப்பாட்டத்தை மேற்கொண்டாலும் பெரிதாக சோபிக்காமால் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந்தநிலையில் தர்மசாலாவில் இடம்பெறவுள்ள 4 வதும் இறுதியான தொடரை தீர்மானிக்கவுள்ள போட்டியில், கோஹ்லிக்கு பங்கேற்க முடியாத நிலை உருவாகலாம் என்ற காரணத்தால், மும்பையை சேர்த்த 22 வயதான சிரேயாஸ் ஐயர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இன்று இந்திய அணியின் பயிற்சி நடவடிக்கைகளில் கோஹ்லி பங்கேற்காத நிலையில்தான், இந்த முன்னாயத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆயினும் இது தொடர்பிலான இறுதி முடிவு நாளையே வெளியாகலாம் என்று நம்பப்படுகின்றது.

இதற்கு முன்னதான 4 தொடர்களிலும் இரட்டை சதம் விளாசிய கோஹ்லி, இந்த தொடரில் இதுவரையான 5 இன்னிங்ஸ்களிலும் வெறுமனே 46 ஓட்டங்களையே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment